Your are Here :
முகப்பு | இந்திய - திபெத் எல்லைக் காவல்படை
Coaching at Ram Coaching Centre - Paraipatti
இந்திய - திபெத் எல்லைக் காவல்படை
இந்திய - திபெத் எல்லைக் காவல்படை (Indo-Tibetan Border Police -ITBP) என்பது இந்திய - சீன எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். லடாக் பகுதியிலுள்ள கரகோரம் கணவாய் முதல் அருணாசலப் பிரதேசம் ஜசிப் லா என்ற இடம்வரையுள்ள 3488கி.மீ இந்திய-சீன எல்லையை பாதுகாக்கிறது. பனி பனிப்புயல், பனிப்பாறை சரிவுகள், நிலச்சரிவுகள் போன்ற இயற்கை சீற்றங்களுடன் -40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் 9000 முதல் 18000 அடி உயரத்தில் எல்லையை காக்கிறார்கள். உள்நாட்டு மருத்துவ முகாம், பேரழிவுக்கால மேலாண்மை, அணுக்கரு மற்றும் கதிர் விபத்து, உயிரியல் மற்றும் வேதியல் பேரழிவுகள் போன்ற சூழல்களுக்கு ஏற்ப இப்படை பயிற்சிப் பெற்றுள்ளது. பொசுனியா எர்செகோவினா, கொசோவோ, எயிட்டி, சூடான் மற்றும் எந்த நாட்டிலும் ஐ.நா. அமைதி நடவடிக்கைகளில் பங்குகொள்கிறது. மலைகளில் மீட்புபணி புரிவதாலும், இயற்கை பேரழிவுகள் நடக்குமிடம் என்பதாலும் இப்படையின் பெரும்பாலனவர்களுக்கு மலையேற்றமும், பனிச்சறுக்கும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது
ராம் பயிற்சி மையம் இந்திய - திபெத் எல்லைக் காவல்படை (Indo-Tibetan Border Police -ITBP) தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் முன்னணியில் இருக்கிறது