Your are Here :
முகப்பு | மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை
Coaching at Ram Coaching Centre - Paraipatti
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை(Central Industrial Security Force), 1983 ஜூன் 15ல் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆயுதமேந்திய மத்திய காவல் படைகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கிய தொழில் நிலையங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை இராணுவப்படையாகும். அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதான சின்னங்கள் போன்றவைகளை பாதுகாக்கிறது. இதன் தலைமை செயலகம் புது தில்லியில் உள்ளது. இந்தப் படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி 1969 மார்ச் பத்தாம் நாளில், 2,800 படைவீரர்களுடன் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டது. இதன் அப்போதைய பணி மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதாகும். பின்னர், 1983 ஜூன் பதினைந்தாம் நாளில் இயற்றப்பட்ட மற்றொரு சட்டத்தின் படி, ஆயுதம் ஏந்தும் உரிமை வழங்கப்பட்டது. பின்னர், இதன் அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டு, மத்திய அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கத்தொடங்கியது. இதன் மூலம் எல்லா விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே நிலையங்கள் போன்ற பொதுத்துறை நிலையங்கள் இதன் கட்டுப்பாட்டில் வந்தன. இந்திய தலைநகருக்கு அச்சுறுத்தல் அதிகமானதையடுத்து, 2007 எப்ரல் 15 முதல் டெல்லி மாநகரக் காவல் இப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. 2009 பிப்ரவரி 25ல் அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின்படி தனியார் நிறுவனங்களுக்கும், கூட்டுறவு நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கியது. தற்போது இப்படையில் ஒரு லட்சத்தி இருபதாயிரம் படைவீரர்கள் உள்ளனர்.
உலகில் உள்ள தொழிற்துறை பாதுகாப்புப் படைகளில் இப்படையே மிகப்பெரிய படையாகும். தற்போதைக்கு 300 தொழில் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கிவருகிறது. அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், இராணுவ அமைவிடங்கள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பாலைகள், கனரக ஆலைகள், எஃகு உலைகள், அணைக்கட்டுகள், உரக்கிடங்குகள், விமான நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், நாணய அச்சு ஆலைகள், சில பன்னாட்டு இந்திய தனியார் நிறுவனங்கள் போன்றவைகளுக்கு பாதுகாப்பளிக்கிறது. இவ்வமைப்பு பாதுகாப்பு மட்டுமன்றி தனியார் அமைப்புகளுக்கு பாதுகாப்புத்தொடர்பான அலோசனைகளும் அளித்துவருகிறது. இதன் ஆலோசனை மையங்கள் நாடுமுழுவதும் உள்ளன. தேர்தல் பணிகளின் போதும் இப்படை பயன்படுத்தப்படுகிறது.
தகுதிகள்
இந்தியராக இருக்க வேண்டும்
வயது வரம்பு
18 முதல் 25 வரை
படிப்பு தகுதி
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதாவது டிகிரி முடித்திருக்க வேண்டும்