Your are Here :
முகப்பு | எல்லை பாதுகாப்பு படை (BSF)
Coaching at Ram Coaching Centre - Paraipatti
எல்லை பாதுகாப்பு படை (BSF)
எல்லை பாதுகாப்பு படையானது (Border Security Force) ஒரு துணை இராணுவப் படையாகும். (பாரா மிலிட்டரி). இந்தியாவின் நில எல்லைகளை காத்தல் மற்றும் எல்லைத் தாண்டிய குற்றங்களைத் தடுத்தல் இதன் முக்கியப் பொறுப்பாகும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இது செயல்படுகிறது. BSF உலகின் மிகப்பெரிய எல்லைப் பாதுகாப்புப் படையாகும். மிகப்பெரும் படை அளவும், செயல்பாட்டையும் கொண்டிருப்பதன் காரணமாக, தனக்கென தனி வான், கடல் மற்றும் பீரங்கிப் படைப்பிரிவை கொண்ட ஒரே மத்திய ஆயுதக் காவற்படை (Central Armed Police Force -CAPF), எல்லைப் பாதுகாப்பு படை ஆகும். இது ஐந்து மத்திய ஆயுதக் காவற் படைகளுள் ஒன்றாகும். மேற்கே பாகிஸ்தான் தொடங்கி கிழக்கே வங்கதேசம் வரை 6000 கி.மீ எல்லையை 656 எல்லைச் சாவடிகளைக் கொண்டு எல்லைப் பாதுகாப்பு படை ஆனது இந்திய எல்லைகளைக் காக்கின்றது. எல்லைப் பாதுகாப்பு படை நிறுவன தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஜெனரல் டியூட்டி கேடர்
கான்ஸ்டபிள்
சப்-இன்ஸ்பெக்டர்
தொடர்பு - அமைவு
உதவி கமாண்டன்ட்
உதவி சப் இன்ஸ்பெக்டர் (Radio Mechanic)
தலைமை கான்ஸ்டபிள் (Radio Operator)